fbpx

திருப்பதியில் பிரமோற்சவம் நடைபெற இருப்பதை முன்னிட்டு, இன்று முதல், தமிழ்நாட்டில் இருந்து திருப்பதிக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் சிரமங்களை போக்கும் விதத்தில், சென்னை,தஞ்சை,திருச்சி,கோவை, மதுரை,காரைக்குடி,கும்பகோணம்,புதுவை போன்ற பகுதிகளில் இருந்து, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு, இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு …

சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இருந்தும் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தற்போது புரட்டாசி மாதம் என்பதால் …

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின் அடிப்படையில், திருப்பதி மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ்நாடு கர்நாடக எல்லைகளில் 24 மணி நேரமும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட எர்ரவாரி பாளையம் பகுதி வழியாக மிகப்பெரிய அளவில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ஒரு …

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி அருகே சேனப்பட்லா என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக பூட்டப்பட்ட வீடுகளில் திடீரென்று தீப்பற்றி எறிய தொடங்கியது. இதனால் பல வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்த வீடுகளால் பொதுமக்கள் அச்சமடையத் தொடங்கினர். சாமிக்கு குற்றம் …

நாட்டில் உள்ள மிகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றுதான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்குதான் நாட்டிலேயே அதிக அளவிலான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசித்து செல்கிறார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவிலில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் …

தமிழகத்தின் சென்னையிலிருந்து சட்ட விரோதமாக தங்க பிஸ்கட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று திருப்பதி அருகே உள்ள நாயுடு பேட்டா மற்றும் சூலூர் பேட்டா காவல்துறையினர் ஆந்திர மற்றும் தமிழக எல்லையில் திருப்பதி மாவட்டம் சூலூர் பேட்டாவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்படி நடத்திய சோதனையில், சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு சென்று …