fbpx

கோதுமை அல்லது மெஸ்லின் மாவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் தடையிலிருந்து விலக்கு அளிக்கும் கொள்கை திருத்த முன்மொழிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த ஒப்புதல் கோதுமை மாவு ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை அனுமதிக்கும்.

இது கோதுமை மாவின் அதிகரிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்தும். மேலும், சமூகத்தில் மிகவும் …

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத்திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்புப்பேருந்துகள் இன்று முதல் அடுத்த மாதம் 11-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கியமாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, …

தமிழகத்தில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்சார சேவைகளுக்கான கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பையும் தாண்டி ஆவின் பொருட்களின் விலையை …

தமிழகத்தில் கடந்த 34 மணி நேரத்தில் 12 கொலைகள்‌ மட்டுமே நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது

இது கறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கடந்து36 மணி நேரத்தில்‌ 15 கொலைகள்‌ நடந்ததாக சில ஊடகச்‌ செய்திகளில்‌ மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில்‌ 22.08.2022 அன்று 7 கொலைகளும்‌, 23.08.2022 அன்று …

ஆசிரியர்கள் பாட குறிப்பேடு பதிவேடுகளை மட்டும் பராமரித்தால் போதுமானது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; கல்வித்துறையில் பல்வேறு பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், தேவையில்லாத பதிவேடுகள் நீக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பின்படி, 81 பதிவேடுகளை மட்டும் இணையதளத்தில் …

தமிழ்நாடு அரசின் பணிகளில் 18 துணை ஆட்சியர், 26 துணை காவல் கண்காணிப்பாளர், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர், 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் உள்ளிட்ட 92 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. முதல் நிலை தேர்வு அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. முதல் நிலை தேர்வு …

தமிழகத்தில் விழாக்கள், பண்டிகைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுதப்படை காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து டிஜேபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது; தமிழகத்தில்‌ எதிர்வரும்‌ நாட்களில்‌ முக்கிய விழாக்கள்‌, …

பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் மாணவர்கள் …

இலக்கியத் திறனறிவுத் தேர்வுக்கு நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் …

சேலம்‌ கிளை, தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகம்‌ அலுவலகத்தில்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்‌ கடன்‌ முகாம்‌ 02.09.2022 வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு தொழில்‌ முதலீட்டுக்‌ கழகம்‌ மாநில அளவில்‌ செயல்பட்டு வரும்‌ தமிழ்நாடு அரசு நிதிக்‌ கழகம்‌ ஆகும்‌. …