விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களுக்கு, ஆளுநர் தலைமையில் தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மைக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முன்னாள் படைவீரர் கல்வி மேம்பாட்டு நிதியுதவியை 2022-23ம் கல்வியாண்டு …
tn government
1895 கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
இது குறித்து கல்லூரிக்கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4,000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு …
மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-சி பணிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி அளவிலான தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 19 அன்று சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் 4,500-ற்கும் மேற்பட்ட குரூப்-சி பணிகளுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வி அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை …
தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000 பெறும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தருமபுரி மாவட்டத்தில், மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000/- பெற்று வரும் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், தசைசிதைவு …
2022-2023ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கூட்டத் தொடரின்போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் கிராம ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம், விளம்பர வரி, உரிமக்கட்டணம் போன்றவற்றை இணைய வழியின் மூலம் செலுத்தும் வசதி உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் ஊரக …
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மேல்நிலை படிப்பு அளவிலான தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் 16-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் …
கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், கரும்பு விவசாயத்தை மேம்படுத்தக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. …
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வு நாளை நடைபெற …
மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொது மக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் …
சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு கிடையாது அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார் 46.00 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு பள்ளி சத்துணவு மையங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்களின் அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் உள்ள …