fbpx

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் என்னும் திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 3,095 உயர்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,210 அரசு பள்ளிகளில் இந்த வானவில் மன்றம் தொடங்கப்பட …

டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழ் மொழி பயிலரங்கம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அரசு அலுவலகங்களில்‌ ஆட்சிமொழித்திட்டச்‌ செயலாக்கம்‌ விரைவாகவும்‌, முழுமையாகவும்‌ நடைபெறத்‌ துணைபுரியும்‌ வகையில்‌ ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ ஆட்சிமொழிப்‌ பயிலரங்கம்‌ மற்றும்‌ கருத்தரங்கம்‌ தமிழ்‌ வளர்ச்சித்துறை சார்பாக நடத்த பெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ 2022-23ஆம்‌ ஆண்டிற்கு ஆட்சிமொழிப்‌ பயிலரங்கம்‌, …

விளம்பர பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் மட்டுமே செலவு ஆனதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு விளம்பர பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவு செய்வதாக குற்றச்சாட்டை வைத்திருந்தார். இதற்கு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து, அனைத்து மாவட்டங்களில் இருந்து …

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும்‌ பிற மாநிலங்களில்‌ உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம்‌, என்ஜடி மற்றும்‌ மத்திய பல்கலைக்கழகங்களில்‌ பட்டப்படிப்பு மற்றும்‌ பட்டமேற்படிப்பு பயிலும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ இன மாணவ, மாணவிகளின்‌ குடும்ப ஆண்டு …

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலி பட்டியல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை விண்ணப்பதாரர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவுரை வழங்கி உள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 02.07.2022 முற்பகல்‌ மற்றும்‌ பிற்பகலில்‌ நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல்‌ …

பேருந்து பயணத்தின் போது பயணிகளிம் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்க கூடாது என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பொது மக்கள் பயணச்சீட்டு வாங்க கொடுக்கும்போது, அரசுப்பேருந்து நடத்துநர்கள் வாங்க மறுப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சுற்றறிக்கை ஒன்றை …

தமிழக அரசு சார்பில் வரும் 25ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; தனியார்‌ துறை நிறுவனங்களும்‌ – தனியார்‌ துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துக்கொள்ளும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌ ஒவ்வொரு மாதத்தின்‌ இரண்டாம்‌ மற்றும்‌ 4-ம்‌ வெள்ளிக்கிழமைகளில்‌ …

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மாணவ, மாணவியர்களிடமிருந்து திருக்குறள்‌ முற்றோதும்‌ போட்டிக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; இலக்கியங்கள்‌ அனைத்திலும்‌ சிறந்ததும்‌ உன்னதமானதும்‌ மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலானதும்‌ ஆகிய தன்னிகரற்ற படைப்பு திருக்குறள்‌. அத்தகைய சிறப்புமிக்க திருக்குறட்பாக்களை மாணவர்கள்‌ இளம்‌ வயதிலேயே மனனம்‌ செய்தால்‌ அவை பசுமரத்தாணிபோல்‌ பதிந்து, …

கல்லூரிகளில் ஆடை கட்டுப்பாடு குறித்து எந்தவித அறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என உயர் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

உயர் கல்வித்துறை துணைச்செயலாளர் தனசேகர், கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் …

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உடனடியாக நிலுவையில் இருக்கும் ஊதியத்தை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 32 கல்வி மாவட்டங்களின் கீழ் வரக்கூடிய அரசு உதவி …