fbpx

10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுவராமவர்மா வெளியிட்ட செய்தி குறிப்பில்; ‘2022-23ஆம் கல்வியாண்டில் 2023 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்களும், ஏற்கெனவே 2012-ம் ஆண்டிற்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் …

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022-2023ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் செப்.10ஆம் தேதி முதல் மின்கட்டண ஆணை நடைமுறைக்கு வந்தது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் …

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில்; 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. …

தமிழகத்தில் பயிர்களை உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழ்நாடு வேளாண் பெருமக்களை பாதுகாக்க, தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 15-ம் தேதி என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் படி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, …

தமிழக அரசின் ஓய்வூதியர்களோ அல்லது அவரது துணைவரோ உயிரோடு இருக்கும்போதே குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கான பயன்பெற நியமனதாரர்களை நியமிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்‌ குடும்ப பாதுகாப்பு நிதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஓய்வூதியதாரரின்‌ விருப்பத்தின்பேரில்‌, அவரின்‌ ஓய்வூதியத்திலிருந்து சந்தாத்‌ தொகை பிடித்தம்‌ …

மருத்துவத்துறையில் தொழில் ஆலோசகர் பதவி, குடிசை மாற்று வாரிய சமூக ஆர்வலர் பதவிக்கான எழுத்துத்தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய …

2022-2023 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ மேல்நிலைக்‌ கல்வி பயிலும்‌ விருப்பம்‌ உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கு தயார்‌ செய்யும்‌ வகையில்‌ பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்விஅலுவலர்கள்‌, கீழ்காணும்‌ அறிவுரைகளை மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌,மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கு வழங்கி செயல்படுத்துமாறு பள்ளிகல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.…

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2748 காலிப்பணியிடங்கள்.

தமிழ்நாடு வருவாய்த் துறையில் இருந்து தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கிராம உதவியாளர் பணிகளுக்கு என 2748 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 22 முதல் 32 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் …

தருமபுரி மாவட்டத்தில்‌ கால்நடை பராமரிப்புத்துறை மூலம்‌ 2022- 23-ம்‌ ஆண்டிற்கான மானியத்துடன்‌ கூடிய கால்நடை காப்பீட்டுத்‌ திட்டம்‌செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி இந்த மாவட்டத்தில்‌ கால்நடை காப்பிடுசெய்ய குறியீடு நிர்ணயம்‌ செய்து 2100 அலகுகள்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில்‌ கால்நடையின்‌ மதிப்பீட்டில்‌ அதிக பட்சமாக ரூ.35000 வரை மானியத்துடன்‌ காப்பீடு செய்து கொள்ளலாம்‌. ரூ.35,000 மதிப்பீட்டிற்கு மேல்‌ உள்ள …

பத்திரப்பதிவுத்துறையில் ஆவண எழுத்தர்களுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை வெளியிட்டு பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார்.

2022-2023 ஆம்‌ ஆண்டிற்கான வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை தொடர்பான மானியக்‌ கோரிக்கையின்‌ போது வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ தமிழகத்தில்‌ 1998-க்கு பின்னர்‌ புதியதாக ஆவண எழுத்தர்‌ உரிமங்கள்‌ வழங்கப்படவில்லை. பதிவுக்கு வரும்‌ ஆவணங்களின்‌ எண்ணிக்கை தொடர்ந்து …