தொகுதி மறுவரையறை தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது என‌ முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்; மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. மத்திய பா.ஜ.க. […]

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம்பெண்கள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக […]

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கான நகல் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு […]

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் இளங்கலை, முதுகலை, பட்டயம் சான்றிதழ் மற்றும் முதுகலை வணிக நிர்வாகவியல், முதுகலை கணினி பயன்பாடுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், http://online.ideunom.ac.in என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் இளங்கலை, […]

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சூரிய சக்தி நிறுவல் பயிற்சி வரும் 18.06.2025 முதல் 20.06.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சூரிய சக்தி துறையில் தொழில்முனைவோரின் அடிப்படைகள், சூரிய சக்தி துறையில் தொழில்முனைவோரின் அடிப்படைகள், சூரிய சக்தி மென்பொருள் கண்ணோட்டம், […]

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம், 2022-23 கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் 2026-27 கல்வியாண்டு […]

கிராம உதவியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, மதிப்பெண்கள் குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை தமிழக வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து வருவாய்த்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்; கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, வருவாய்த் துறை செயலரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, கிராம உதவியாளர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, கல்வித் தகுதியில், எஸ்எஸ்எல்சியில் தமிழ் […]

சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரப் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகாசி மாதத்தின் மங்களகரமான தினமான இன்று அதிகளவில் […]

கோவில் திருவிழாவுக்கு அதிகளவில் கூட்டம் செல்வதும் உண்மையிலேயே நாகரீகமான சமூகத்திற்கு ஒரு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும் பொது இடங்களில் கூடும் போது, பொதுமக்கள் நம்முடைய அறிவினை பயன்படுத்தி முண்டியடித்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் இந்த கருத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து […]

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இது வரை 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; கடந்த 07.05.2025 அன்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. 02.06.2025 மாலை 6 மணி நிலவரப்படி 2,81,266 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். […]