குரூப் 2 தேர்வர்களுக்கு ஜூலை 22 முதல் 24-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; குரூப் 2 தேர்வில் பங்கேற்ற நபர்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் நேற்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் 22 முதல் 24-ம் தேதி வரை, சென்னை பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு […]

ஊரக உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நகர ஊரமைப்பு சட்ட விதிகளின்படி ஊரகப்பகுதிகளில் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைளும் விளக்கப்பட்டுள்ளன. தற்போது, ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வாயிலாக, கட்டிட அனுமதியை 3 வகைகளில் வழங்க வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சுயசான்றின் அடிப்படையில் 2,500 […]

TNPSC – Group II & IIA முதல்நிலை போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி […]

தமிழக அரசு மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 மற்றும் பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது. தமிழக அரசு மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 மற்றும் பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, டெலிவரி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கப்படும் என்று 2025-26 பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்து […]

முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று […]

சார்- பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. குரூப்-2 ஏ தேர்வுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், […]

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதில் பெருந்திரளாக பங்கேற்குமாறும் தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில்; தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசான திமுக அரசு, இன்னும் இரு மைல்கல்களை கடந்திருக்கிறது. முதலாவதாக, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு […]