திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மர்ம நபர்கள் சிலர் மலம் கழித்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வேங்கை வயல் குடிநீர் தொட்டிகளும் மலம் கலந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த பெரும் […]
tn govt
1,416 நகர்ப்புறப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் (கிராமப்புறப் பகுதிகள்) பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நடப்பு […]
சிறுவன் கடத்தல் தொடர்பான வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞருக்கும் தேனியை சேர்ந்து பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்தது. இதில் அந்த பெண்ணை மீட்பதற்காக, அந்த இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் […]
சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரப் பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது வைகாசி மாதத்தின் மங்களகரமான தினமான இன்று அதிகளவில் […]
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசுஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என அறிவித்தார்கள். அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 2023ம் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் 2023ம் மாதம் முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான […]
சேலம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் 50% மானியத்தில் 250 எண்ணிக்கையில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2023-24 ஆம் நிதியாண்டில் நாட்டு கோழிவளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டு கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு 3-6 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் […]
கோடை விடுமுறை முடிவடைந்து தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் அதாவது ஜூன் மாதம் 12ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் செயல்பட உள்ளது. இதனை முன்னிட்டு பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து செய்வதற்கு பள்ளி கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக ஒரு தகவல் வேகமாக பரவியது. ஆனால் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது ஒரு புதிய விளக்கத்தை கொடுத்திருக்கிறது. அதில் ப்ளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து என்று பரவும் […]
திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பணிகளும், பொறுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவகைத்திற்கு பணி அமர்த்தப்பட்டுள்ள உதவித் திட்ட அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உரிய இடம் ஒதுக்கீடு செய்து தருதல் வேண்டும். இருக்கைகள், கணினி தொடர்பான சாதனங்கள் இவர்களுக்கு பெற்றுத் தருதல் வேண்டும். இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், முன்பருவக் கல்வி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலுள்ள ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு […]
தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவான விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரம் பொதுமக்களின் வசதிக்காக அவ்வப்போது நியாய விலை கடைகளில் புதுப்புது வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தற்சமயம் நியாய விலை கடைகளில் கூடுதலாக சில பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது கூட்டுறவு பண்டகச் சாலைகள் மூலமாக சற்றேற குறைய 1254 கோடி வர்த்தகம் நடைபெற்று […]
நாடு முழுவதும் சமீப காலமாக நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் தமிழகத்தில் இந்த நோய் தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில அரசு மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, இந்த நோய் தொற்று பாதிப்பால் ஆங்காங்கே உயிர் பலியும் நிகழ்கிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மாநில அரசு […]