சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல காவல்துறை உத்தரவு. போராட்டத்தை தொடர்வதால் பொது அமைதி, பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுகிறது. உத்தரவை மீறி போராட்டத்தை தொடர்ந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரிக்கை. சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களில் சில வார்டுகள் தவிர மற்ற பகுதிகளில் தூய்மைப்பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. […]

சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்களுக்கு, இரவு பணியிலிருந்து விலக்கு அளித்து, காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க சென்னை காவல்துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் முக்கிய சாலைகள் மற்றும் சாலை […]

விசாரணை என்ற பெயரில் மதுரை ஆதீனத்தை தமிழ்நாடு காவல்துறையை வைத்து திமுக தொந்தரவு செய்து வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக காவல்துறை இன்று மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. தொடர்ந்து மத குருமார்களையும், ஆன்மீகப் பெரியோர்களையும் பல சொல்ல முடியாத இன்னல்களுக்கு உட்படுத்தி வருகிறது இந்தத் திமுக அரசு. […]

நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சையாக பேசிய வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதை பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை […]

இன்று சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் தவெக ஆர்பாட்டத்திற்கு 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் […]

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட துயர நிகழ்வுக்கும், தற்போது, நவீன் இறப்புக்கும் பொதுவான சந்தேகம், திமுக அரசின் காவல்துறை மீதுதான் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன் பொலினேனி (37). திருமணமாகி குடும்பத்துடன் சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகர், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சென்னை […]

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணத்தை தொடர்ந்து காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். இவரை ஜூன் 27-ம் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். […]

முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில், மதுரையில் கடந்த 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் அரசியல், மதம், பொது அமைதிக்கு எதிராகப் பேசக்கூடாது என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளை, மாநகர காவல் துறை விதித்திருந்தது. […]

பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க அனைத்து ஊர்களிலும் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் குலாம் தஸ்தகீர் மீது போதைக் கும்பல் பெட்ரோல் ஊற்றி […]