வங்கக் கடலில் நிலவும் டிட்வா புயல் இன்று காலை சென்னையை நெருங்குகிறது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் 90 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 140 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் […]

அதி கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இலங்கை பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வரும் ‘டித்வா’ புயல் நாளை அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இதன் காரணமாக, டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 […]

இலங்கை பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயல் நாளை அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல், இலங்கை திரிகோண மலையில் இருந்து தென்மேற்கே சுமார் 40 கி.மீ., சென்னையில் இருந்து தெற்கே 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்காக நகர்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகள் […]

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.. டிட்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில இடங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதன்படி நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. […]

மலாக்கா அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘சென்யார்’ புயலாக வலுப்பெற்று இந்தோனேசியாவில் கரையை கடந்தது. இலங்கை அருகே நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகத்தில் நவ.29, 30 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘சென்யார்’ புயலாக வலுப்பெற்று, மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு இந்தோனேசியா பகுதிகளில் நிலவியது. […]

பருவமழையால் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 122 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்களும், 6,033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தின் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, […]

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், இன்று இலங்கை அருகேயும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலாக்கா ஜலசந்திப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நிகோபார் தீவுகளில் இருந்து தென்கிழக்கே 870 கி.மீ. தொலைவில் […]

அந்தமான் பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி 27-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மலேசியா மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு […]

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும். டெல்டா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். […]

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.மத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த […]