கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரத்துக்கு டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தொலைதூரப் பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்து, இருக்கை மற்றும் படுக்கை […]

பேருந்துகளில் பயணிகளிடம் சில்லறை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று, நடத்துநர்களுக்கு, மாநகர போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போது பயணச் சீட்டுக்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் நடத்துநர்கள் ஈடுபடுவதாக பயணிகளிடம் இருந்து தொடர்ச்சியான புகார்கள் வருகின்றது. எனவே, பேருந்துகளில் பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறை கொடுக்க வேண்டும் என […]

போக்குவரத்து கழகங்​களில் ஊக்கத்தொகை​யுடன் வழங்​கப்​படும் தொழிற்பயிற்​சி​யில் பங்​கேற்க அக்​.18-ம் தேதிக்குள் விண்​ணப்​பிக்​கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில்: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, எம்டிசி, எஸ்இடிசி ஆகிய மண்டலங்களில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 458 காலியிடங்களும், பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு 561 காலியிடங்களும், கலை, அறிவியலில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 569 காலியிடங்களும் உள்ளன. […]

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு […]

தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு, 18 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த, 2016 செப்டம்பர் 1ம் தேதிக்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களுக்கு, 18 சதவீதமும், அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு, 9 சதவீதமும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை ஓய்வூதியம் உயரும். இதனால், 93,000 ஓய்வூதியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுத்துறை ஓய்வூதியர்களுக்கு தொடர்ச்சியாக அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் நிலையில், […]

மீலாது நபி, தொடர் விடுமுறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; இன்று சுபமுகூர்த்த நாள், நாளை மீலாது நபி, செப்.6,7 வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை 1,115 […]

வார இறுதிநாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்கேற்ப சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாக்குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை 340 பேருந்துகள் […]

வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 1,035 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் 19, 20 தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் ஜூலை 18, 19 தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி,கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 705 பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, […]