தமிழகத்தில் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அரசு சிறப்பு செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையில் பணியாற்றிய சதிஷ் சந்திரா சவான், அரசு செயலாளர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறைக்கு […]

அதிவட்டி விகிதத்தில் (floating interest rate) வழங்கப்படும் கடன்களை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்ற விரும்பும் தனிநபர் கடனாளர்களிடமிருந்து, வங்கிகள் முன்கட்டணத் தொகை அல்லது pre-closure charges எதையும் வசூலிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில், “அதிவட்டி விகித கடன்களில், முன்பணம் செலுத்தும் கடனாளர்களிடமிருந்து எந்தவிதமான அபராத கட்டணமும் வங்கிகள் வசூலிக்கக் கூடாது,” என தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைகள் […]

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாறுதல் கோரி விண்ணப்பித்த அனைத்து வகை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூன் 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் திருத்தம் இருப்பின் ஜூன் 29-ம் தேதி முறையிடலாம். அதன்பின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியாகும். தொடர்ந்து அனைத்து விதமான ஆசிரியர்களுக்கான பொது […]

தொடக்க, நடுநிலைப் பள்ளி அனைத்து வகையான ஆசிரியர்கள் 2025-2026. பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் EMISல் பதிவேற்றம் செய்வது சம்பந்தமான தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த 2024-25ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. அதனைப் பின்பற்றி கடந்த 2024-25-6 ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் கலந்தாய்வுப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதே போல […]

தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி மகேஷ்குமார், தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், அங்கிருந்த ஜெயந்தி காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன முதன்மை விஜிலென்ஸ் […]