தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கு தனிநபர் கடனுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், நலிவடைந்த பழங்குடியினர் (PVTG), திருநங்கைகளை (மூன்றாம் பாலினத்தவர்) கொண்டு சிறப்பு சுய உதவிக் குழுக்களை அமைப்பதன் வாயிலாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அவர்களின் வறுமை மற்றும் பாதிப்புகளை குறைத்து, வாழ்வாதாரம் மேம்படுவதற்கான முறையான முயற்சிகளை […]

சென்னையில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைப்பாலினர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். எனவே, தொழிற்கல்வி, பட்டம், பட்டயம், பொறியியல், மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த படிப்பு, சட்டம், முதுகலை, முனைவர் ஆகிய உயர்கல்விக்கு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உயர்கல்வியைத் தொடர […]

புதுமைபெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் ரூ. 1000 கல்வி உதவித் தொகை பெற உயர்கல்வி பயிலும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்பதை தளர்வு செய்யப்பட்டுள்ளது. சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் கல்விக்கு உதவும் வகையில் பட்ட […]

திருமணம் செய்து கொண்ட திருநங்கைக்கு குடும்ப வன்முறை புகார் அளிக்க உரிமை உண்டு என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 498A இன் கீழ், ஒரு பெண் தனது கணவர் அல்லது கணவரின் உறவினர்களால் வன்முறைக்கு ஆளானால் புகார் அளிக்க உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருநங்கைகளுக்கு அத்தகைய பாதுகாப்பு பொருந்தாது என்ற வாதத்தை நீதிபதி வெங்கட ஜோதிர்மயி பிரதாபா […]

திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசின் பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த புதுமைப் பெண்’ மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ்வழியில்) 6-12 வகுப்பு வரை தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இந்த நிபந்தனையை […]

சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.06.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம் 2008-ல் அமைக்கப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற […]

தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற ஜூன் 24 ல் திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருநங்கைகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்கு திருநங்கை நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நல வாரியத்தின் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய தொழில் துவங்க மானியத் தொகை கல்வி […]

கலைஞர் அவர்கள் அரவாணிகளும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதால் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக, “தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்” 15.4.2008 அன்று தொடங்கப்பட்டு, அரவாணிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் வழங்கினார். அத்துடன் அரவாணிகள் என்னும் பெயரை திருநங்கையர் எனவும் மாற்றி அறிவித்தார்கள். அதன் பிறகு அரவாணிகள் நலவாரியம் திருநங்கையர் நலவாரியம் என வழங்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் திருநங்கையர் நலவாரியத்தினை 15 அலுவல்சார் […]