ஓய்வூதியர் பணப்பலன் வழங்குவதற்காக ரூ.1,137 கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு தற்காலிக முன்பணமாக (கடன்) தமிழக அரசு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பிறப்பித்த உத்தரவில்: போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை முதல் நடப்பாண்டு ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கும் பணப்பலன் வழங்கும் வகையில் நிதியுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். இதை பரிசீலித்த அரசு, […]