இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் (ஆகஸ்ட் 7) அமல்படுத்தப்படவுள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள தாக்கம் குறித்து பெரும் கவலைகளை எழுப்பியது. இருப்பினும், தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. PHD வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (PHDCCI) நடத்திய ஆய்வின்படி, இந்த வரி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.19% […]

அமெரிக்காவின் அதிரடி வரிவிதிப்புக்கு பயந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி வைத்தால் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பல்வேறு வகையிலான வரிகளை விதித்து வருகிறார். அந்த அடிப்படையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தனியாக அபராதம் […]

ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை கவுன்சில் துணை தலைவர் டிமெட்ரி மித்வதேவ் தெரிவித்த சர்ச்சைகுரிய கருத்தால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் நேற்று அணு ஆயுத தாக்குதல் நடத்தும் இரு நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யா நோக்கி அனுப்பி வைக்க உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுளளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் மீதான போரால் […]

சரியான நேரத்தில் தலையிடாவிட்டால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போர் வெடித்திருக்கும் என்று கூறினார். வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறு இரு நாடுகளையும் மிரட்டியதாகவும், இதனால் போர் தவிர்க்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஸ்காட்லாந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் உட்பட உலகில் ஆறு பெரிய போர்களை நிறுத்த தாம் பாடுபட்டதாக டிரம்ப் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுத நாடுகள் என்பதால் அவற்றை “மிகப்பெரிய ஹாட்ஸ்பாட்” என்று […]

79 வயதான அதிபர் டிரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு chronic venus insuffiency எனப்படும் நோய் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த சில நாட்களாக அவரின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் Chronic Venous Insufficiency (நாள்பட்ட நரம்பு செயலிழப்பு) என்ற நிலை இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலை குறித்து […]

பிரேசிலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடா மீதும் வரி விதித்துள்ளார். கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1 முதல் அமல்ப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள கடிதத்தில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் 35% வரி விதிக்கப்படும் என்றும், பெரும்பாலான பிற வர்த்தக நாடுகள் […]

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் நாசாவில் பணிபுரியும் 2,000 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யவுள்ளதாகவும், இதனால் அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து விண்வெளி துறையிலும், நாசாவின் 18 ஆயிரம் பணியாளர்களிடையேயும் திட்டமிடல், 2026 நிதியாண்டிற்கான பணிநீக்கம் மற்றும் முன்மொழியப்பட்ட பட்ஜெட் குறைப்பு காரணமாக குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டஜன் கணக்கான அறிவியல் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் […]

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் கூட்டணியில் உள்ள நாடுகள் மீது விரைவில் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு நாடுகளுக்கான வரியை அதிரடியாக உயர்த்தினார். பின்னர் இந்த வரிவிதிப்பு முடிவை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இந்த அவகாசம் இன்றுடன் (ஜூலை 9) முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள […]

அமெரிக்கா மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக கனடா அறிவித்ததை தொடர்ந்து, வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் , பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது கனடா. வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடான […]