உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாள் கடின போராட்டத்திற்குப் பிறகு நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மீட்புப்பணியாளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி, சில்க்யாரா பகுதியில் சார்தாம் யாத்திரை நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் 4.5 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்தது. …