தவெகவின் 2-வது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி மதுரை நடைபெறும் என்று விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பரப்புரையை முன்னெடுத்து வருகிறது.. அதே போல் அதிமுகவும் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. ஒருபுறம் கூட்டணி […]

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? அவரின் வாக்கு சதவீதம் எவ்வளவு இருக்கும்? என்ற கேள்விக்கு Grok சொன்ன பதில் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி […]

தனது உயிருக்கு ஆபத்து உள்ளது தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா இருந்து வருகிறார்.. தவெக சார்பில் நடத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் இவர் விஜய்யை விட ஆக்ரோஷமாக பேசி வருகிறார். இந்த நிலையில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் […]

அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப்போவதாக வெளிவரும் தகவல்கள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திமுகவினர்தான் அடிமை மாடலும், பாசிச அரசியலும் செய்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா பெண்களை கேவலமாக பேசுகிறார். பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. வகுப்பறையில் ப வடிவில் இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது என்ன அடிப்படையில் என்பது தெரியவில்லை. படிக்கும் மாணவர்களுக்கு […]

இன்று சென்னை சிவானந்தா சாலையில் நடைபெறும் தவெக ஆர்பாட்டத்திற்கு 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் […]

அதிமுகவின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண பாடல், லோகோ வெளியீட்டு நிகழ்ச்சியில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்ததால் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது.. கடந்த 50 மாத ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பெற்ற வேதனைகள், துன்பங்கள், கொடுமைகள் அத்தனையும் மக்களிடம் பட்டியலிட்டு எடுத்து சொல்லி, திமுக ஆட்சியை […]

சென்னை பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் செயற் குழுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைக் கழக சிறப்புக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்று பேசினார். இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “திமுக மற்றும் பாஜக உடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை என்பதை உறுதியாக […]

தவெக மாநில செயற்குழு கூட்டத்தில், நிர்வாகிகளுக்கு விஜய் சில முக்கிய அறிவுரைகளையும் வழங்கி உள்ளார். தவெகவின் மாநில செயற்குழு கூட்டம், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில மண்டல நிர்வாகிகள், செயலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விஜய்யின் தாயார் ஷோபாவும் இதில் கலந்து கொண்டார். செயற்குழு கூட்டம் […]