விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலிலும் ஈடுபட்ட விஜய் ஜனநாயகன் படம் எனது கடைசி படம் என கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த நிலையில் விஜய் தனது முடிவினை மாற்றி உள்ளதாக ஜன நாயகன் படத்தில் நடித்து வரும் மமிதா பைஜூ தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தளபதி விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக வெற்றிக் கழகம் என்ற […]

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்யம் கட்டியெழுப்பியவர் தளபதி விஜய். ரசிகர்களின் ஆதரவை மிகுந்த அளவில் பெற்றிருக்கும் இவர் நடித்த திரைப்படங்கள் வெளியாவும் நேரங்களில் ரசிகர்கள் கொண்டாடும் பண்டிகை போல் அமைகின்றது. ஆனால், இதன் மறுபுறமாக அவரது படங்கள் ஒவ்வொன்றும் சர்ச்சைகள் இல்லாமல் வெளிவந்ததாக சொல்ல முடியாது. படப்பிடிப்பில் தொடங்கி, விளம்பர நிகழ்வுகள், அரசியல் கருத்துகள், வரிப்பணங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் என ஒவ்வொரு படத்திற்கும் ஒரு சர்ச்சை இருந்தே தீரும். […]

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்பிற்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்கள் சமூக நிலை குறித்து சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை ஆகும். இந்தக் கோரிக்கையானது, இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்த காரணத்தால் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி வந்து, […]

தவாக எம் எல் ஏ வேல்முருகனின் சர்ச்சை பேச்சுக்கு நிகழ்ச்சி மேடையில் மாணவி பதிலடி கொடுத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 3 ஆண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். அந்த வகையில், இந்தாண்டும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. தவெக தலைவர் விஜய்யின் விருது […]

சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த IRS அதிகாரி கே.ஏ.அருண்ராஜ், தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே 22 ஆம் தேதி அவர் விருப்ப ஓய்வு பெற்றதும், இன்று பனையூரில் விஜய்யை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் […]

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3 கட்டங்களாக விஜய் கல்வி விருது வழங்க உள்ளார். இதன் முதற்கட்ட நிகழ்ச்சி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 88 தொகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கிறார்கள். இது முற்றிலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சி என்பதால் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த […]

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தேர்வை தீவிரமாக ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-ல் தனது அரசியல் கட்சியை தொடங்கி, விக்கிரவாண்டி மாநாடு, சென்னையில் பொதுக்குழு, கோவையில் பூத் மாநாடு என தொடர்ச்சியான செயல்பாடுகளால் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்ற விஜய், தற்போது மாவட்ட மட்ட கட்டமைப்புகளையும் வலுப்படுத்தி வருகிறார். எனினும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையாத நிலையில், முழு நேர அரசியலில் முழுமையாக இறங்காமல் […]

ஞானசேகரன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு காவல்துறை தான் காரணம் என மனசாட்சியின்றி பச்சை பொய்யை மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் நிர்வாகத் தோல்வியை மறைப்பதற்காகத் தி.மு.க.வினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். […]