கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை […]
ugc
1956 ஆம் ஆண்டு UGC சட்டத்தின் பிரிவு 13 இன் கீழ் தகவல்களை சமர்ப்பிக்கத் தவறியதற்காகவும், தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் தங்கள் பொது சுய-வெளிப்படுத்தல் விவரங்களை பதிவேற்றாததற்காகவும், இந்தியா முழுவதும் உள்ள 54 அரசு தனியார் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜூன் 10, 2024 அன்று வெளியிடப்பட்ட பொது சுய-வெளிப்படுத்தல் குறித்த UGC வழிகாட்டுதல்களை தொடர்ந்து இந்த உத்தரவு வந்துள்ளது.. இது அனைத்து உயர்கல்வி […]
திறந்த நிலை, இணைய வழி படிப்புகளில் சேருவதற்கு முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென யுஜிசி தெரிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; உயர் கல்வி நிறுவனங்களில் இணையவழி, திறந்தநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அக்டோபர் 15- ம் தேதி வரை நடைபெறும். இதன் வழியே படிக்க விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியலை https://deb.ugc.ac.in இணைய தளத்தில் அறிந்து […]
கல்லூரிகள் இணையக் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சைபர் விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமை குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த பரிந்துரைகளுக்கு ஏற்ப, 2024 நவம்பர் 6-ம் தேதி, யு.ஜி.சி. “உயர் கல்வி நிறுவனங்களுக்கான சைபர் ஹைஜீன் அடிப்படை வழிகாட்டியை வெளியிட்டது. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், உரிய வழிகாட்டுதலை […]
உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்க்கரை, எண்ணெய் பொறித்த உணவு பொருட்கள் குறித்த அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டுமென கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு செயலர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்தியாவில் உடல் பருமன் தீவிர பொது சுகாதார பிரச்சினையாக இருக்கிறது என சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து பள்ளி, […]
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்திய கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகளில் சேரும் முன்பு அதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என யுஜிசி எச்சரித்துள்ளது. இந்திய மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த பட்டம், இரட்டைப் பட்டப்படிப்பு திட்டங்களின் விதிமுறைகள்- 2022 யுஜிசி-யால் 2023 டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. அதே ஆண்டில் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்-2023 விதிமுறைகளும் […]
ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றாத 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பி உள்ளது 2025–26 கல்வியாண்டு தொடங்கவிருக்கும் நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்கு மாற உள்ளனர். இந்த நிலையில், ராகிங் தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என்று கூறி பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இந்தியா முழுவதும் உள்ள 89 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 5 தமிழக பல்கலைக்கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராகிங் […]
உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யுஜிசி செயலாளர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக யுஜிசி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 589-வது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு […]