ஆதார் ஒரு மிக முக்கியமான ஆவணமாகும். எனவே, அது தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பது நமது பொறுப்பாகும். சமீபகாலமாக, இந்த அட்டையின் வாயிலாக நடைபெறும் முறைகேடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர், கைரேகைகளைச் சேகரித்து அவற்றை நகலெடுப்பதன் (cloning) மூலம் குற்றங்களை இழைத்து வருகின்றனர். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் கசிந்தால், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, ஆதார் அட்டையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க […]