மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் தேவைகளை மனதில் கொண்டு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றின் முக்கிய நோக்கம் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும். இருப்பினும், சமீபத்தில், ஒரு திட்டத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் போலி செய்திகள் பரவலாகப் பரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் யூடியூப் சேனலில், “வேலையின்மை உதவித்தொகை திட்டம் 2024-25 – மாதத்திற்கு ரூ. 3,500, பதிவு தொடங்கப்பட்டுள்ளது” என்ற சிறுபடத்துடன் ஒரு வீடியோ […]

கணவன் வேலை இன்றி இருக்கும் நிலையிலும், பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு கொண்டிருக்கும் காலத்திலும், அவரை இழிவுபடுத்துவது அல்லது நியாயமற்ற கோரிக்கைகளை வற்புறுத்துவது மனரீதியான கொடுமைக்கு சமம் என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிபதி ரஜனி துபே மற்றும் நீதிபதி அமிதேந்திர கிஷோர் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு ஆணுக்கு விவாகரத்து வழங்கும்போது இந்தக் கருத்தை வெளியிட்டது. அதாவது COVID-19 தொற்றுநோய் காலத்தில் வேலை இன்றி இருந்த கணவனை […]

ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.. இது திறன் அடிப்படையிலானவை என வகைப்படுத்தப்பட்ட கேம்கள் உட்பட, அனைத்து உண்மையான பண விளையாட்டுகளையும் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.. இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த நிலையில் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆன்லைன் கேமிங் துறை கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. அத்தகைய நடவடிக்கை துறையை பேரழிவிற்கு உட்படுத்தி, நிறுவனங்களை […]