மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப்பணி போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் …