அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் டையிலான போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இரு தரப்பினரும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் இந்தப் போர் தற்போது 6-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போதைக்கு இந்த மோதல் குறையும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 5 நாட்களில் ஈரானில் மட்டும் 1,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லெபனான் நாட்டில் சுமார் […]

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கொஜஸ்தே பகெர்சாதே திங்கட்கிழமை உயிரிழந்ததாக, ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் காயமடைந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்துள்ளார். 79 வயதான மன்சூரே கொஜஸ்தே பகெர்சாதே, ஈரானின் மஷ்ஹத் நகரில் பிறந்தவர். அவர், ஈரான் அரசின் ஒளிபரப்பு நிறுவனமானஇஸ்லாமிக் குடியரசு ஈரான் ஒலிபரப்பு நிறுவனத்தில் முன்னாள் துணை இயக்குநராக இருந்த […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ளது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் 76 வயதான பிரதமர் நெதன்யாகு அங்கு இருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ஆவது தாக்குதல் அலையில், ‘கெய்பார் ஷெகான்’ (Kheybar Shekan) என்ற கண்டம் விட்டு […]

ஈரானில் திங்கள்கிழமை, ஆயிரக்கணக்கான மக்களின் கைபேசிகளில் மர்மமான எச்சரிக்கை செய்தி ஒன்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த செய்தியில், பாரசீக மொழியில் “அமெரிக்க ஜனாதிபதி அதிரடி மனிதர். காத்திருந்து பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி தெரியாத ஒரு எண்ணிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம், டொனால் டிரம்ப் ஈரான் அரசை கடுமையாக விமர்சித்து வரும் சூழலில் நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியில் ராணுவ கப்பல்கள் மற்றும் போர் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் 800-க்கும் மேற்பட்டோருக்கு திட்டமிடப்பட்டிருந்த தூக்குத் தண்டனைகளை ரத்து செய்ததற்காக, அந்த நாட்டின் ஆட்சியை எதிர்பாராத விதமாக பாராட்டியுள்ளார். டிரம்பின் இந்த கருத்து, நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள் தற்போது தணிந்துவரும் நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாரா-லாகோ இல்லத்திற்கு புறப்படுவதற்கு முன், ஈரான் எடுத்த இந்த […]