தந்தை மீதான புகாரில் அவரது மகன்களை அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை அலங்காநல்லூரில், அப்பாவுக்கு பதிலாக மகன்களை பிடித்து போலீசார் விசாரித்த மற்றொரு வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நீ வந்தால் தான் உன் அப்பா வருவார் என்று மிரட்டி, அவரது இரண்டு மகன்களையும் போலீசார் காவல் […]

சமூக ஊடகங்களில் “கூமாபட்டிக்கு வாங்க” என்ற ஹேஷ்டேக்குடன் பகிரப்படும் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள், தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. பசுமை மலைக்குன்றுகள், குற்றால வனவாசலின் அருகில் உள்ள மெல்லிய பச்சை தரைகள், பனித்துளிகள் நிறைந்த இயற்கைக் காட்சிகள் இளம் பயணிகளையும் சமூக ஊடக ஆளுமைகளையும் வெகுவாக ஈர்த்துள்ளன. ஆனால், இந்த இடங்கள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்பதால், பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதியில்லை […]

“ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க!” என இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு ரீல்ஸ் வீடியோவால், தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமமான கூமாபட்டி உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கூமாபட்டி சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கை சூழல் […]

அமெரிக்காவில் Dusting சேலஞ்ச் என்ற வைரல் ட்ரெண்ட் காரணமாக 19 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது… சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் அவ்வப்போது பல ட்ரெண்ட்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது டஸ்டிங் (Dusting) எனப்படும் வைரலாகி வருகிறது.. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் இந்த ஆன்லைன் ட்ரெண்டை செய்து பிரபலமாக நினைத்துள்ளார். ஆனால் எதிர்பாராத […]

விழுப்புரம் மாவட்டத்தில் ஆவின் பாலகத்தில் வாங்கிய குல்பியில் ஈ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர் ஆவி நிர்வாகத்திடம் முறையீடு செய்தார். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது . விழுப்புரம் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் ஆவின் பால் நிலையம் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இந்தக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சேர்மனாக திமுக பிரமுகர் தினகரன் இருந்து வருகிறார். இவர் பால் நிலையம் அருகே உள்ள ஆவின் […]

தற்போது நாம் ஏ ஐ என்று சொல்லப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு ரோபோவிற்குள்ளும் உணர்வுகளையும் அதற்கேற்ற முக பாவனைகளையும் கொண்டுவர முடியும் என  உலகின் முதல் அதிநவீன ஹூமனாய்ட் ரோபோ நிரூபித்துள்ளது. லண்டனைச் சார்ந்த  இன்ஜினியரிங் ஆர்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  இந்த அதிநவீன ரோபோவின் முகபாவனைகள்  மனிதர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடான முகபாவனைகளை ஒத்திருக்கின்றன. சமீபத்தில் […]

மத்திய பிரதேச மாநிலத்தின்குவாலியர் நகரில் நாய்க்குட்டியை இளைஞர் ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை குற்றவாளியை தேடி வருகிறது.இந்தச் சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் உள்ள ஹரி ஷங்கர்புரம் என்ற இடத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த வரிசங்கர்புரம் ஜான்சி ரோடு […]

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. ஃபைசியா பாத் நகரிலிருந்து 133 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட அதிர்வில் கட்டிட இடுப்பாடுகளில் […]

வரதட்சணை கொடுமையால் பல பெண்களின் வாழ்க்கை பாலாகியது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த நவீனமான காலகட்டங்களில் கூட வரதட்சணை கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. வரதட்சணை கேட்டு மணப்பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதும் வரதட்சணை கொடுக்காததால் திருமணங்கள் நிறுத்தப்படுவதும் மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற மணப்பெண் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும் இன்னும் தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது இது போன்ற ஒரு கொடுமையான சம்பவம் தான் வட மாநிலம் ஒன்றில் நடந்திருக்கிறது. […]