தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க தேர்தல்: இசையமைப்பாளர் சபேசன் புதிய தலைவராக தேர்வு.!

திரைப்படத் துறையிலும் பல்வேறு கலைஞர்களுக்கான சங்கங்கள் இயங்கி வருகிறது. கலைஞர்களின் நலன் மற்றும் உரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த சங்கங்கள் இயங்கி வருகின்றன. சினிமா துறையில் நடிகர்கள் சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் இருப்பது போல் இசை கலைஞர்களுக்கான சங்கமும் இருக்கிறது. இந்த சங்கத்தில் பிரபல இசையமைப்பாளர்கள் முதல் பாடகிகள் வரை பல்வேறு தரப்பினரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் செப்டம்பர் 2023 இல் நடைபெறுவதாக இருந்தது. இந்தத் தேர்தலில் வாக்குரிமை இல்லாத அசோசியேட் இசை கலைஞர்களுக்கு வாக்குரிமை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இசை கலைஞர்களின் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ததோடு தேர்தல் நடத்துவதற்கான தடையையும் நீக்கியது. இதனைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்தத் தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியம் தலைமையில் நடத்தப்பட்டது. இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு இசையமைப்பாளர் தீனா மற்றும் சபேசன் ஆகியோர் போட்டியிட்டனர். தினம் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலின் முடிவில் இசையமைப்பாளர் சபேசன்( சபேஷ் முரளி) வெற்றி பெற்று இசையமைப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கு முன்பு இசை கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த தீனா சங்கத்தின் நிதியை மோசடி செய்ததாக புகார் எழுந்ததால் இந்த முறை இசை கலைஞர்கள் சபேசனுக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர். புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சபேசன் பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவாவின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Tamil cinema industry music composer union election held today. Music director Sabesan elected as new president.

Next Post

"தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு"... "வெள்ள பாதிப்பிற்கு 1 ரூபாய் கூட தரவில்லை" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு.!

Sun Feb 18 , 2024
மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி பங்கீடு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. தமிழக மற்றும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்கள் செலுத்தும் வரிப்பணத்தை மத்திய அரசு வட மாநிலங்களுக்கு செலவிடுவதாக தென் மாநில அரசுகள் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக கேரள அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தது. மாநில அரசிற்கு மத்திய அரசு முறையாக நிதி […]

You May Like