TRB: தமிழ் வழி ஒதுக்கீடு சான்றிதழ்… ஆகஸ்ட் 7-ம் தேதி கடைசி நாள்…! உடனே இதை செய்யுங்க

TRB 2025

மாநில தகுதித் தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்கள், அதற்கான சான்றிதழ்களை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில்; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மாநில தகுதித் தேர்வு (செட் தேர்வு) கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அடிப்படையில் செட் தேர்வில் தமிழ் வழியில் பயின்றோருக்கு (பிஎஸ்டிஎம்) இடஒதுக்கீடு வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

செட் தேர்வு எழுதியுள்ள விண்ணப்பதாரர்களில் தமிழ் வழி ஒதுக்கீ்ட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்கள் அப்பிரிவின் கீழ் முன்னுரிமை கோர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இங்க மட்டும் போய்டாதீங்க!. ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே தெரியும் மர்ம சாலை!. திடீரென மறைந்துவிடும்!. இது எங்கே இருக்கிறது?

Sat Jul 26 , 2025
உங்கள் கண் முன்னே ஒரு சாலை இருந்து, அது திடீரென்று சில நிமிடங்களில் மறைந்துவிட்டால் எப்படி இருக்கும்? ஐயோ.. கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது, இல்லையா.. ஆனால் உண்மையில் அப்படி ஒரு விசித்திரமான சாலை இருக்கிறது. இந்த சாலை ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தெரியும்.. மீதமுள்ள நேரத்தில் மறைந்துவிடும். அப்படிப்பட்ட சாலை எங்கே இருக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் உயர் தொழில்நுட்ப […]
World Mysterious Road 11zon

You May Like