’ஊழலின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மின்சார வாரியம்’..! அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில், சிலரை பணக்காரர்களாக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பல சாக்குப் போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில், சிலரை பணக்காரர்களாக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?” என்று பதிவிட்டுள்ளார்.

’ஊழலின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மின்சார வாரியம்’..! அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “லஞ்சம், ஊழல், முறைகேடுகள், நிர்வாக சீர்கேடு, முறையான திட்டமின்மை, மலிவு அரசியல் ஆகிய காரணங்களால் மின் உற்பத்தி, பகிர்மானம் மற்றும் விநியோகத்தை முறையாக செய்யமுடியாமல் மின்வாரியத்தையும், பகிர்மான கழகத்தையும் பெரும் நஷ்டத்தில் மூழ்க விட்டதற்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய அரசின் நிர்பந்தத்தால்தான் மின் கட்டணத்தை உயர்த்துகிறோம் என்று கூறியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நிர்வாக திறனற்ற நிலையில், லஞ்சம், ஊழலை ஒழிக்க மனமில்லாத அரசு பழியை மத்திய அரசின் மீது போட்டு தப்பித்துக் கொள்ள பார்ப்பது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். மின்சாரத்தை சேமித்தால், அரசுக்கு லாபம். இல்லையேல் அரசியல்வாதிகளுக்கு லாபம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. உண்மையில் மக்கள் மீது அக்கறையிருந்தால், மத்திய அரசின் ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை பின்பற்றி நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்துவதில், முனைப்புக் காட்டுங்கள். அதை விடுத்து மத்திய அரசின் மீது விமர்சனம் செய்துவிட்டால் மக்கள் உங்களின் தவறுகளை மன்னித்து விடுவார்கள் என்று எண்ணாதீர்கள்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Chella

Next Post

அதிகரிக்கும் பாலியல் குற்றங்களை குறைக்க அதிரடி சட்டம்..! வெளியான பரபரப்பு தகவல்..!

Tue Jul 19 , 2022
தாய்லாந்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை குறைக்க, அந்நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16,413 பாலியல் குற்றவாளிகளில், 4,848 நபர்கள் திரும்பவும் அதே குற்றங்களில் ஈடுபடுவதை அறிந்த தாய்லாந்து அரசு, இது போன்ற சம்பவங்களை தடுக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஆண்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) என்னும் […]

You May Like