மின்சாரத்துறையில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை.. செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

tn govt jobs 1

சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் முக்கிய பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்னென்ன தகுதிகள் தேவை உள்ளிட்ட விவரங்கள் இதோ..


காலிப்பணியிடங்கள்:

நிறுவன செயலாளர் (ACS/FCS) – 2
இடைநிலை நிறுவன செயலாளர் (CS) – 4

வயது வரம்பு:

* நிறுவன செயலாளர் பதவிக்கு 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 30 வயது இருக்க வேண்டும்.

* இடைநிலை தகுதிப் பெற்றவர்கள் ஜனவரி 1-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 22 வயது இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

* விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* நிறுவன செயலாளர் பதவிக்கு விண்ணப்பிப்போர் ICSI (The Institute of Company Secretaries of India) உறுப்பினர் தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.

* இடைநிலை நிறுவன செயலாளர் பதவிக்கு டிக்ரி + ICSI இடைநிலை தேர்ச்சி போதுமானது.

 * விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

அனுபவம்:

நிறுவன செயலாளர் பதவி: வரிசைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் வாரியம், SEBI, பங்குச் சந்தை ஆகியவற்றில் குறைந்தது 3 வருட அனுபவம் வேண்டும்.

இடைநிலை நிறுவன செயலாளர்: அனுபவம் குறிப்பிடப்படவில்லை.

சம்பளம்: நிறுவன செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 1,00,000 சம்பளமாக வழங்கப்படும். இடைநிலை தகுதிப் பெற்றவர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் https://www.tnpdcl.org/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பம், உரிய ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து தலைமை பொறியாளரை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

முகவரி
தலைமை பொறியாளர்,
தமிழ்நாடு மின் விநியோக கழகம்,
எண்.144, அண்ணா சாலை,
சென்னை – 600 002.

Read more: இந்த ஒரு கீரை போதும்..! இரத்த அழுத்தம், நீரிழிவு, பார்வை பிரச்சனை – எந்த நோயும் கிட்ட நெருங்காது..!

English Summary

Tamil Nadu Electricity Distribution Corporation, located in Chennai, has issued a notification for key posts.

Next Post

Breaking : ஒரே நாளில் ரூ.2,080 உயர்ந்த தங்கம் விலை.. பேரதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

Tue Oct 21 , 2025
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
gold new

You May Like