நர்சிங் படிச்சிருக்கீங்களா..? தமிழ்நாடு அரசில் 2,417 காலிப்பணியிடங்கள்..! ரூ.71,900 வரை சம்பளம்..!! உடனே விண்ணப்பிங்க..

job

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் (Village Health Nurse) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் நவம்பர் 24 முதல் டிசம்பர் 14 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணியிட விவரம்:

துணை செலிவியர்/ கிராம சுகாதார செவிலியர் – 2,417

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் 60 வயதை நிறைவு செய்திருக்கக்கூடாது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் பின்பற்றப்படும்.

கல்வித்தகுதி:

  • துணை செவிலியர்/ கிராம சுகாதார செவிலியர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • துணை செவிலியர் அல்லது பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகியவற்றில் 2 ஆண்டு பயிற்சி கல்வியை பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.
  • 2012-ம் ஆண்டிற்கு முன்பு வரை 10-ம் வகுப்பிற்கு பின்பு 18 மாதங்கள் பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு நிலை 8 கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • இப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்படாது.
  • மெரிட் அடிப்படையில் (மதிப்பெண்கள்) மட்டுமே தேர்வு நடைபெறும்.
  • காலிப்பணியிடங்கள் மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளுக்கு ஏற்ப விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மதிப்பெண்கள் கணக்கிடப்படும் விதம்:

  • சான்றிதழ் படிப்பில் (ANM/others) பெற்ற மதிப்பெண்கள் – 60%
  • 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் – 40%
  • கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ சேவைகளில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும். இது இறுதி மெரிட் பட்டியலில் சேர்க்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

* தகுதியான விண்ணப்பதாரர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

* முகப்பு பக்கத்தில் இருக்கும் “துணை செவிலியர் / கிராம சுகாதார செவிலியர்” லிங்கை கிளிக் செய்யவும்.

* புதிய விண்ணப்பதார்கள் “New User” என்பதைக் கிளிக் செய்து பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

* ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் “Registered Candidate” என்பதை கிளிக் செய்து, தங்கள் விண்ணப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

* 2023 அறிவிப்பில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை, ஆனால் தேவையான திருத்தங்களைச் செய்யலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2025

Read more: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்து…!

English Summary

Tamil Nadu Government has 2,147 Village Health Nurse vacancies.. Salary up to Rs.71,900..!!

Next Post

அதிமுக மாஜியை தட்டித் தூக்கிய விஜய்..! தவெகவில் இணையும் செங்கோட்டையன்..? பரபரக்கும் அரசியல் களம்..!

Tue Nov 25 , 2025
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்த மூத்த தலைவர்களில் செங்கோட்டையன் முக்கியமானவர்.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தீவிர விசுவாசியாக இருந்தவர்.. அதிமுகவில் கிளை செயலாளர், மாவட்ட செயலாளர், அதிமுக ஆட்சியில் அவை முன்னவர், அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.. அரசியலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர்.. அதிமுக வரலாற்றில் 9 முறை சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவான வெகு சிலரில் செங்கோட்டையனும்..  ஈரோட்டில் அதிமுகவின் முகமாகவும் செங்கோட்டையன் […]
TVK Vijay sengottaiyan

You May Like