ஊர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலை, நீர் நிலைகளுக்கு உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.. பறையர் தெரு, சக்கிலியர் தெரு போன்ற பெயர்களை நீக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
நீர் நிலைகளுக்கு பூக்களின் பெயர்களை சூட்டவும், தெருக்கள், சாலைகளுக்கு அறிஞர்கள், தலைவர்களின் பெயரை சூட்டவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. சாதிப் பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19-ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More : கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!