தமிழ்நாடு அரசு, கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அதிகபட்ச வயது வரம்பை உயர்த்தி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுதும் காலியாக உள்ள, 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வருவாய் துறை முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், இதற்கான எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற பணிகள் மாவட்ட அளவில் நடைப்பெற்று வந்தன.
ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் இதில் பங்கேற்று, தேர்வு மற்றும் அடுத்தடுத்த கட்டங்களை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். ஆனால், அரசு வயது வரம்பை உயர்த்தியதையடுத்து, தற்போது நடைபெற்று வந்த எல்லா பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.. இதனால் தேர்வுக்குத் தயாராகியிருந்த பலரும் குழப்பத்தில் உள்ளனர்.
இதுதொடர்பாக, வருவாய் துறை செயலர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அடிப்படையில், கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கலாம். அதாவது, பொதுப்பிரிவினருக்கு, 32; பி.சி., – எம்.பி.சி., – டி.என்.சி., பிரிவினருக்கு, 39; எஸ்.சி., – எஸ்.டி., வகுப்பினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு, 42 ஆண்டுகள் என, வயது வரம்பை கடைப்பிடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Read more: பேரீச்சம்பழம் Vs வாழைப்பழம் : சர்க்கரை நோயாளிகளுக்கு எது நல்லது? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!



