புனித பயணம் செல்ல நபர்களுக்கு… தமிழக அரசு வழங்கும் ரூ.10,000 நிதி உதவி…! முழு விவரம்

Tn Govt 2025

தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.10000/- வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.10000/- வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புனித தலங்களின் விவரம்:

புத்த மதம் 1. பீகாரில் உள்ள புத்த கயா, 2. உத்திரபிரதேசத்தில் உள்ள குசிநகர். 3. வாரணாசியில் உள்ள சாரநாத் கோவில், 4. பீகாரில் உள்ள ராஜ்கிர் வைஷாலி, 5. நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற இடங்கள். சமண மதம் 1. இராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமண கோவில், ஜெய்சால்மர் சமண கோவில், 2. ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி 3. குஜராத்தில் உள்ள பாலிடனா. 4. பீகாரில் உள்ள பவபுரி சமண கோவில் போன்ற இடங்கள். 5. கர்நாடகாவில் உள்ள சரவணபெலகோலா.

சீக்கிய மதம் -1. பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகர் சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமா சாகிப், 2 பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் (குரு கோவிந்த் சிங்), தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்கள், 3. பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நான்காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீ சச்சா சௌதா, மண்டி சுகர்கானா, குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாகிப், ஹசன் அப்தல்,குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப் இத்திட்டத்தின் கீழ் 01.07.2025க்கு பிறகு புனித பயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 30.11.2025 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: மனித மண்டை ஓடுகளால் கோபுரங்களைக் கட்டிய கொடூர மன்னர்கள் யார் யார்? வரலாற்றின் இருண்ட பக்கங்கள்..

Vignesh

Next Post

நாளை ஆடி அமாவாசை!. முன்னோர்களுக்கு இந்த நேரத்தில் திதி கொடுத்தால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும்!

Wed Jul 23 , 2025
மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது. வழக்கமாக வரும் அமாவாசைகளில், தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் […]
aani amavasai 11zon

You May Like