தமிழ்நாடு அரசு, மாணவர்களை சந்தைத் தேவைக்கு ஏற்ப தயார்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ‘நான் முதல்வன்’ திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) போன்ற திட்டங்கள், மாணவர்களின் தொழில்திறனை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில், தொழில்துறையில் ITI படித்தவர்களுக்கு நேரடி பயிற்சி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் வழங்கப்படுகிறது. இதில் மாதம் ரூ.14,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சிக்காலம் ஒரு வருடம் ஆகும்.
Mechanic Motor Vehicle, Mechanic Diesel, Auto Electrician, Electrician, Fitter, Welder போன்ற தொழில்நுட்ப துறையில் ITI முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான கல்வித் தகுதி மற்றும் பூர்த்தி செய்ய வேண்டிய கோப்புகள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இந்த பயிற்சிக்கு நேரடியாக முகாமில் பங்கேற்க வேண்டியது அவசியம். விண்ணப்பதாரர்கள், செப்டம்பர் 10ஆம் தேதி, காலை 10 மணி முதல் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு நேரில் செல்ல வேண்டும். இந்த முகாம் “மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டை, சென்னை” என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சி வாய்ப்பு, வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மிகச் சிறந்த தொடக்கமாக இருக்கலாம். தொழில்துறையில் நேரடி அனுபவம், வாடிக்கையாளர் சேவை, இயந்திர பராமரிப்பு, மற்றும் தொழில்நுட்ப திறன்கள் ஆகியவற்றில் வல்லுநராக மாற இது ஒரு அரிய வாய்ப்பு ஆகும்.