சூப்பர்..! 7 சதவீத வட்டியில் தமிழக அரசு வழங்கும் கடன் உதவி…! எப்படி இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்…?

tn Govt subcidy 2025

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் சிறு வர்த்தகம் வணிகம். விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்கள் செய்வதற்கு அதிக பட்சமாக ரூ.25.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் ரூ.1.25 இலட்சம் வரை 7 சதவிகிதமும் மற்றும் ரூ.1.25 இலட்சம் முதல் ரூ.15.00 இலட்சம் வரை 8 சதவிகிதமும் ஆகும். கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

குழுக்கடன் திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25.00 இலட்சம் வரையும் ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனைத் திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் ஆகும். சுய உதவிக்குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் (Grading) செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

Vignesh

Next Post

மனைவியை கொலை செய்துவிட்டு செய்தி சேனலுக்குள் சென்று வாக்குமூலம் அளித்த சிஆர்பிஎஃப் வீரர்!. சென்னையில் பயங்கரம்!.

Mon Aug 4 , 2025
தூத்துக்குடியில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர், தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு சென்னையில் உள்ள செய்தி சேனல் அலுவலகத்திற்குள் புகுந்து வாக்குமூலம் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தாளவாய்புரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (41). இவர் CRPF வீரராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் தமிழ்ச்செல்வன் ஊருக்கு சென்றபோது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த […]
tuticorin wife murder 11zon

You May Like