அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கடும் வெயில்…! எல்லாம் உஷாரா இருங்க மக்களே…!

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவில் குறைவாக இருக்கக்கூடும். நாளை முதல் 3-ம் தேதி வரை தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

Indian Ship: எம்வி கங்கா விலாஸ் இன்று திப்ருகாரில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளது..!

Tue Feb 28 , 2023
நாட்டின் மிக நீளமான நதிக்கப்பலான எம்வி கங்கா விலாஸ் இன்று திப்ருகாரில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளது. இந்தியாவிலேயேத் தயாரிக்கப்பட்ட எம்பி கங்கா விலாஸ் கப்பலின் இந்தப் பயணத்தை பிரதமர் வாரணாசியில் கடந்த ஜனவரி 13ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தனது 50 நாள் பயணத்தில், இந்தியா- வங்கதேசம் இடையேயான நீர்வழியிலான 3,200 கிலோ மீட்டர் தூரத்தை இக்கப்பல் கடக்கிறது. இந்தக் கப்பலின், தனது 50 நாள் […]
Central Gov

You May Like