கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கௌரி’ சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவந்த நடிகை நந்தினி, தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பின் தமிழில் ‘கௌரி’ தொடரில் துர்கா – கனகா என இரட்டை வேடங்களில் நடிந்து வந்தார். இந்த சீரியல் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. விடுமுறையில் பெங்களூருக்கு சென்ற அவர், தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்று இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த நடிகை ராஜேஸ்வரியையும் தற்கொலை செய்திருந்தார். அவரது மறைவு சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சில நாட்களில், இந்த நடிகையையும் தற்கொலை செய்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Read more: சூரியன்-சந்திர சேர்க்கை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு இனி கஷ்ட காலம்..! கவனமா இருங்க..



