உலக சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ்.. 17வயதில் வரலாற்று சாதனை! குவியும் பாராட்டு!

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி சென்றுள்ளார்.

பிடே கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி தொடர் கனடா நாட்டின் டோரண்டோ நகரத்தில் நடைபெற்று வந்தது. அதில் 8 வீரர்களும், 8 வீராங்கனைகளும் பங்கேற்றனர். இவர்கள் தங்களுக்குள் தலா இரண்டு முறை எதிர்கொள்ள வேண்டும். முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்கள்.

இத்தொடரில் 13 சுற்றுகள் முடிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில்தான் கடைசி சுற்றான 14வது சுற்றின் ஆட்டம் இன்று தொடங்கியது. அமெரிக்காவின் நகமுராவை குகேஷ் கறுப்பு நிற காய்களுடன் எதிர்கொண்டார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததால் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தார். நெபோம்நியாச்சி – பேபியானோ காருனா மற்றொரு ஆட்டமும் டிராவில் முடிந்ததால் குகேஷ் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

இதன்மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை மிக இளம் வயதிலேயே வென்ற வீரர் என்ற சாதனையை (17 வயது) குகேஷ் படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனை எதிர்கொள்ள இருக்கிறார். குகேஷுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் எக்ஸ் தளத்தில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Post

"நீரிழிவு கால் புண்" அபாயத்தைக் குறைக்க பிரத்யேக ஷூ!… சிறப்பம்சங்கள் இதோ!

Mon Apr 22 , 2024
Diabetic Foot shoe: நீரிழிவு கால் புண்களின் அபாயத்தைத் தணிக்க வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ஷூ இன்சோல் தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் நீரிழிவு நோயால் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். நீரிழிவு கால் புண்கள் ஒரு குறிப்பிடத்தக்க ஆரோக்கிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களில் ஒருவர் கால்களில் புண்கள் ஏற்படுவதற்கு ஆளாகிறார்கள். இந்த புண்கள் காலப்போக்கில் நரம்புகள் மற்றும் கால்களுக்கு இரத்த விநியோகம் […]

You May Like