தமிழ்நாட்டின் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது..
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் 41 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. வழக்குப் பதிவு செய்ய சொன்னது அரசு தான்.. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கு நிலையில், திடீரென அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனங்களில் சோதனை நடத்தியது.. ஊழியர்களின் செல்போன்களை கைப்பற்றியதுடன், அங்கிருந்த கணினிகள், மென் பொருள்களையும் கைப்பற்றினர்..
இவ்வாறு எப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்ய முடியும்? தவறு செய்தவர்களை விட்டுவிட்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? அமலாக்கத்துறை விசாரணை செய்யும் எந்த வழக்காக இருந்தாலும் ஊழல் தடுப்பு பிரிவு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை என்பதை கையில் எடுத்துக் கொள்கின்றனர்..
தற்போது கூட்டாட்சி தத்துவத்தை அமலாக்கத்துறை மீறி உள்ளது? அரசு நிறுவனத்திற்குள் நுழைந்து அவர்களின் அதிகாரத்தை எப்படி தடுக்க முடியும்? இவர்களுக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் அமலாக்கத்துறை மாநில அரசின் காவல்துறை விசாரத்தால் ஊழல் நடந்திருப்பதை மறைக்கலாம்.. எனவே சட்டவிரோத பணப் பரிவர்த்தனை என்பதால் நாங்கள் விசாரணை மேற்கொண்டோம்..” என்று அமலாக்கத்துறை வாதிட்டது.
இதையடுத்து டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளது. தலைமை நீதிபதி கவாய் “ டாஸ்மாக் முறைகேட்டை உள்ளூர் போலீஸ் விசாரிக்க முடியாதா? சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வீர்களா? அரசு அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுப்பது மாநில அரசின் விசாரணை உரிமையை பறிப்பது ஆகாதா?சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது?
அமலாக்கத்துறையின் நடவடிக்கை கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா? மாநில அரசு விசாரணை நடத்தவில்லை என்று கருதும் போது தான் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும்.. மாநில அரசின் விசாரணை நடத்தும் உரிமையை மாநில அரசு தடுக்க பார்க்கிறதா? என்ன நினைத்துக் கொண்டு அமலாக்கத்துறை செயல்படுகிறது?
Read More : PF பயனர்களுக்கு குட்நியூஸ்.. PF கணக்கில் இருந்து 100 சதவீத பணத்தையும் எடுக்கலாம்! எப்படி தெரியுமா?