டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை.. மது பிரியர்கள் ஷாக்.. அதிரடி அறிவிப்பு..!

tasmac

பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் குருபூஜை அனுசரிக்கப்படும் நிலையில் 4 மாவட்டங்களுக்கு டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தினம் அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அமைச்சர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்த வருகை தருவார்கள்.

இதன் காரணமாக பாதுகாப்பு நலன் கருதி செப்டம்பர் 10 மற்றும் செப்டம்பர் 11 ஆகிய இரண்டு நாட்கள் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் செயல்படாது என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more: மீண்டும் அமலுக்கு வரும் தாலிக்கு தங்கம் திட்டம்.. கேட்டதுமே பெண்களுக்கு மகிழ்ச்சி..!

English Summary

Tasmac shops will be closed tomorrow.. Shocking news for liquor lovers.. Action announcement..!

Next Post

18 மாதங்களுக்கு பிறகு உருவாகும் ருச்சக ராஜ யோகம்! இந்த 3 ராசிக்காரர்களுக்கும் பெரும் அதிர்ஷ்டம்! பணம் கொட்டும்!

Wed Sep 10 , 2025
கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றும்போது, ​​ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. குறிப்பாக செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷம் அல்லது விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் போது அல்லது உச்சத்தில் இருக்கும்போது, ​​ருச்சக ராஜ யோகம் உருவாகிறது. இது பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாகும், இது ஒரு அரிய யோகமாகக் கருதப்படுகிறது. இந்த யோகம் அந்த நபருக்கு தைரியம், தன்னம்பிக்கை, தலைமைத்துவ குணங்கள் மற்றும் […]
f8d8a2e31751ac7dc965ea84f863ad421675837337027381 original 1

You May Like