தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றாகவும், தொழில் நகரமாகவும் ராணிப்பேட்டை மாவட்டம் திகழ்கிறது.. இந்த பகுதியில் தோல் பதப்படுத்துதல், தோல் பொருட்கள் தயாரித்த, மருந்து உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட் சிறு, குறு தொழில், பெரிய நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன..
இந்த நிலையில் ராணிப்பேட்டை, பணப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையில் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.. அதன்படி இந்த தொழிற்சாலையில் ஜாகுவார் லேட்ன் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை தொடங்கியது.. இந்த தொழிற்சாலை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார்..
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று டாடா நிறுவனத்தின் Jaguar, Land Rover சொகுசு கார்கள் உற்பத்தியை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் ரேஞ்ச் ரோவர் காரையும் முதல்வர் ஓட்டிப்பார்த்தார்.. ரூ.9,000 கோடி முதலீட்டில், 470 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையின் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது..
இந்த ஆலையில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆலையில் டாடா நிறுவனத்தின் சொகுசு கார்களான ஜாகுவார், லேண்ட் ரோவர் போன்ற கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த ஆலைக்கு கடந்த 2024-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 16 மாதங்களில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
Read More : டெல்லியில் பெரும் பரபரப்பு.. “நாடாளுமன்றம் தகர்க்கப்படும்..” 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..



