அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒரு முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சமாதானம் தன் தலையீட்டின் காரணமாக ஏற்பட்டது என்று கூறியுள்ளார். ஃப்ளோரிடா மாநிலத்தின் மியாமியில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்துவேன்” என்ற தன் மிரட்டலே இந்தியா மற்றும் இஸ்லாமாபாத் இடையிலான போராட்டத்தை நிறுத்தச் செய்தது என தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் “நான் இரு நாடுகளுடனும் (இந்தியா, பாகிஸ்தான்) வர்த்தக ஒப்பந்தம் நடத்திக் கொண்டிருந்தேன். அதற்கிடையில், ஒரு செய்தித்தாளின் முதல் பக்கத்தில் அவர்கள் போருக்கு செல்லப்போகிறார்கள் என்று படித்தேன். இது போர் தான். இரு அணு சக்தி நாடுகள் மோதிக்கொண்டிருக்கின்றன. நான் சொன்னேன், ‘நீங்கள் சமாதானத்திற்கு வரவில்லை என்றால், நான் உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தமும் செய்ய மாட்டேன் என்று கூறினேன்..
அதனால் இரு நாடுகளும் அதிர்ச்சியடைந்தன.. அவர்கள் ‘இது சம்பந்தமற்றது என்று அவர்கள் தெரிவித்தனர்.. ஆனால் இது முழுவதும் சம்பந்தப்பட்டதே. நீங்கள் அணு சக்திகள். நீங்கள் ஒருவருடனொருவர் போரில் ஈடுபட்டிருக்கும்போது, நான் வர்த்தகம் செய்ய மாட்டேன் என்று கூறினேன்..” என்று தெரிவித்தார்..
இந்த உரையாடல் மே 9 அன்று நடந்தது என்று ட்ரம்ப் தெரிவித்தார்.. அடுத்த நாள், மே 10, 2025 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் சமாதானம் செய்ததாக அறிவித்தன.
“ஒரு நாள் கழித்து எனக்கு அழைப்பு வந்தது — ‘நாங்கள் சமாதானம் செய்தோம்’. அவர்கள் போரைக் கைவிட்டனர். ‘நன்றி. இப்போது வர்த்தகம் செய்யலாம்’ என்று சொன்னேன்..” சுங்க வரிகள் (tariffs) இதைச் செய்தது. வரி இல்லாமல் இது நடந்திருக்காது,” என்று ட்ரம்ப் கூட்டத்தின் கைதட்டலுடன் தெரிவித்தார்.
அமெரிக்க சுங்கக் கட்டணங்களில், பாகிஸ்தான் 19 சதவீதம், இந்தியா 25 சதவீதம் கட்டணத்தைச் சந்தித்தது. பின்னர் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மற்றும் BRICS கூட்டணியில் இந்தியாவின் பங்கேற்பு காரணமாக, டிரம்ப் இந்தியாவுக்கு கூடுதல் 25 சதவீத சுங்கத்தை விதித்தார்.. இதனால் மொத்தம் 50 சதவீதமாக உயர்ந்தது.
இந்தியா மறுப்பு
இந்திய அரசு தொடர்ந்து ட்ரம்பின் இந்தக் கூற்றை மறுத்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கனடாவில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இதை தெளிவாக மறுத்தார்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசிய போது “அந்த காலகட்டத்தில், இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்தோ அல்லது இந்தியா–பாகிஸ்தான் இடையே அமெரிக்கா நடுவர் பணியில் ஈடுபட்டதாகவோ எந்த விவாதமும் நடந்ததில்லை என்பதை பிரதமர் மோடி ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களிடம் தெளிவாக கூறினார்.”
கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் பதிலடியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இராணுவ மோதல் தீவிரமடைந்தது.. இதையடுத்து “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
Read More : உலகிலேயே அதிக விமான நிலையங்களைக் கொண்ட நாடு இது தான்..! ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு விமானம்?



