முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அதன் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் நடவடிக்கையை முன்னுரிமையாக கருதுவதாக அதன் தலைமை நிதி அதிகாரி சமீர் செக்சாரியா தெரிவித்துள்ளார்.
ஜூன் காலாண்டுக்கான வருவாய் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பி.டி.ஐ.யிடம் பேசிய அவர், “நாங்கள் லாபத்தை பராமரிப்பதோடு, வளர்ச்சியையும் தொடர உறுதிபூண்டுள்ளோம்” என வலியுறுத்தினார். இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வழக்கமாக வழங்கப்படும் ஆண்டு ஊதிய உயர்வுகள், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சிக்கல்களின் காரணமாக, நிறுவனம் தற்காலிகமாக ஒத்திவைத்தது.
இது குறித்து செக்சாரியா கூறியதாவது: “எனது முன்னுரிமை ஊதிய உயர்வை மீண்டும் தொடங்குவதே. TCS மிக அரிதாகவே ஊதிய உயர்வுகளை ஒத்திவைக்கும். ஆனால் தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்து செயல்பட வேண்டியுள்ளது.” என்றார். ஜூன் காலாண்டில் TCS-க்கு நிகர லாபத்தில் 6% உயர்வு வந்துள்ளது. இயக்க லாப வரம்பு 0.20% குறைந்து, 24.5 சதவீதமாக பதிவாகியுள்ளது.
நிறுவனத்தின் இலக்கு 26% முதல் 28% வரை லாப வரம்பை உயர்த்துவதாகவும் செக்சாரியா தெரிவித்தார். லாபத்துடன் கூடிய வளர்ச்சி தான் நமது நோக்கம். வளர்ச்சி இல்லாமல் லாபம் மட்டும் நிலைத்திருக்க முடியாது, என்றும் அவர் கூறினார். TCS ஊழியர் வெளியேற்ற விகிதம் தற்போது 13.8% ஆக பதிவாகியுள்ளது.
இது குறித்து செக்சாரியா கூறும்போது: “இது சற்று கவலையை ஏற்படுத்துகிறது. எனவே, புதிய பணியமர்த்தல் மற்றும் திறமையாளர்களை தக்க வைக்கும் திட்டங்களில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். அனைத்து திறமையாளர்களையும் தக்கவைக்க முடியவில்லை என்றாலும், ஆரோக்கியமான வெளியேற்ற நிலை இது.” என்றார்.
TCS, தற்போதைக்கு முதலீடுகளை குறைக்க திட்டமிட்டிருக்கவில்லை. ஆனால், சில பகுதிகளில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் செக்சாரியா குறிப்பிட்டார். உதாரணமாக, ஒரு கட்டடத்தின் முழு அடுக்கை கட்டாமல், தேவைக்கு ஏற்ப ஒரு பகுதியை மட்டுமே கட்டுவது போன்ற மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்றார்.
சந்தையில் உள்ள வாய்ப்புகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், நிறுவனத்தின் வளர்ச்சி உண்மையான திறன்களை அடிப்படையாகக் கொண்ட நகர்வுகளின் வழியே அமைய வேண்டும் என்பதே TCS நோக்கம் எனவும் செக்சாரியா தெரிவித்தார். வளர்ச்சியை விரிவுபடுத்தும் நோக்கில் கையகப்படுத்தல்களில் ஈடுபட TCS விரும்பவில்லை. ஆனால் கனிமமற்ற, மதிப்புடன் கூடிய நிறுவன மாற்றங்களை எதிர்நோக்கி வருகிறோம்.
TCS நிறுவனத்தின் ஊழியர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள், இந்த புதிய நிலைப்பாடுகளை அதீத கவனத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். எதிர்காலத்தில் ஊதிய உயர்வு எப்போது? எப்படி? என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: ஒரே பரிசோதனையில் ஐந்து தொற்றுகளை கண்டறியும் மல்டிபிளெக்ஸ் RT-PCR பரிசோதனை.. விரைவில் அமல்..!!