இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), சமீபத்தில் 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்தது இளைஞர்களை அதிர்ச்சியடைச் செய்தது. ஆனால் இந்த அதிர்ச்சி செய்தி மறைவதற்குள், அங்கு பணிபுரிவோருக்கு ஓர் உற்சாக செய்தியை அடுத்த சில நாட்களுக்குள்ளேயே அறிவித்திருப்பது தலைப்புச் செய்தியில் இடம்பிடித்துள்ளது. அதாவது, டிசிஎஸ் நிறுவனம் 80 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்புகள் ஆரம்பத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) செயல்படுத்தலுடன் இணைக்கப்பட்டன. TCS பணிநீக்கங்கள் 283 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அவுட்சோர்சிங் துறையில் AI-இயக்கப்படும் மாற்றத்தைக் குறிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய வேலை வெட்டுக்கள் அரை மில்லியன் வேலைகளை நீக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
டிசிஎஸ் பணிநீக்கங்கள் தொழில்நுட்பத் துறை முழுவதும் ஒரு சர்ச்சையைத் தூண்டியுள்ள நிலையில், சமீபத்திய ஒரு சமூக ஊடக பதிவின்படி, புதியதாக பணியில் சேர்ந்த ஒருவரை, TCS நிறுவனம், தன்னை 15 நிமிடங்களில் தனது வேலையில் இருந்து ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, சில நாட்களுக்கு முன்பு HR தனது திட்ட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க ஒரு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், ஆரம்பத்தில், அந்தக் கூட்டத்தை மிக முக்கியமானதாக நினைக்கவில்லை, இந்த மீட்டிங் நடத்துவது இயல்பானது என்று நினைத்ததாகவும், இருப்பினும், தன்னை பணியில் இருந்து நீக்க HR எப்படி நடந்துகொண்டார் என்பது குறித்து ரெட்டிட் பயனர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அவரது பதிவில், TCS HR 15 நிமிடத்தில் என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டார். என் தொலைபேசியை அணைத்து விட்டார்,” என்று குறிப்பிட்டுள்ளார். ‘Gigacat01’ என்ற Reddit பயனர், HR தன்னை மீட்டிங் அறைக்கு அழைத்து தனது தொலைபேசியை அணைக்கச் சொன்னதாகவும், மேலும் உடனடியாக HR நேரடியாக என்னிடம், ராஜினாமா செய், இல்லையெனில் எதிர்மறை விடுப்புக் கடிதத்துடன் மற்றும் சம்பளம் இல்லாமல் நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.
இதுமட்டுமல்லாமல், HR, அவருக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்படும் என்றும், விடுப்புக் கடிதத்தில் ‘எந்தவொரு எதிர்மறையும்’ இடமிடாது என்றும் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்வதற்கான “தனிப்பட்ட காரணங்களை” எழுதுமாறு கூறியதாகவும் அந்த பயனர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், Reddit பயனர் பதிவிட்டதாவது, ஏற்கனவே எனக்கு ஒரு திட்ட ஒதுக்கீடு (project allocation) இருந்தது. ஆனால் HR அதை முற்றிலுமாக நிறுத்தினார். என் சுயவிவரம் RMG ஆல் தடுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த பகுதியில் ஒரு டிஜிட்டல் வேட்பாளர் தேவையில்லை என்றும் சொன்னார். அப்படி என்றால், என்னை ஏன் நியமித்தார்கள்?” மேலும், தனது குழுவை சேர்ந்த மேலும் நான்கு புதிய பணியாளர்களையும் ராஜினாமா செய்தனர் என்றும் வேலையிழப்பை கேட்டு 4 பேரில் ஒருவர் அழத்தொடங்கிவிட்டார் என்றும் ஆனால் “HR அவரை அந்த கண்ணீருடன் அறையை விட்டு வெளியேற முடியாது எனக் கூறியதையும் பயனர் பதிவிட்டுள்ளார்.
TCS பணிநீக்கத்தால் 80,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக Reddit பயனர் தெரிவித்துள்ளார். மேலும் தான் ஏதாவது சொல்ல நினைத்ததாகவும், ஆனால் எந்த தொடர்பும் இல்லாமல் புதியவராக இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் கூறினார். என் தந்தையை அழைக்கக்கூட அனுமதிக்கவில்லை செய்திகளில் கூறப்பட்டிருந்ததை மேற்கோள் காட்டி பயனர் பதிவிட்டதாவது, 12 ஆயிரம் பேர் என்றும், பெரும்பாலும் மூத்த ஊழியர்களே பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று நிறுவனம் சார்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் உண்மையான எண்ணிக்கை 80 ஆயிரத்தை விட அதிகமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.