மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம். இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான கணினி தேர்வு வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 24ஆம் தேதி (இன்று) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.ctet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.