தூள்..! டெட் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு தடையில்லா சான்று தேவை இல்லை…! பள்ளி கல்வித்துறை தகவல்…!

trb teachers recruitment board

டெட் தேர்வெழுத விரும்பும் ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெற தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் பல லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நடப்பாண்டுக்கான டெட் தேர்வு நவம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வெழுத 4.8 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் காரணமாக பணியிலுள்ள ஆசிரியர்களில் பலர் இந்த முறை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் டெட் தேர்வெழுத ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெற வேண்டிய தேவையில்லை. இந்த தகவலை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆபரேஷன் சிந்தூரில் அழிக்கப்பட்ட பயங்கரவாத முரிட்கே தலைமையகம்!. பாகிஸ்தான் அரசு நிதியுதவியுடன் மறுகட்டமைப்பு!

Sun Sep 14 , 2025
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையால் அழிக்கப்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் இடிப்பு பணிகள் நிறைவடைந்தது; பாகிஸ்தான் அரசின் நிதியுதவியுடன் மறுகட்டமைப்பு தொடங்கியது என இந்திய பாதுகாப்புத் துறையின் மதிப்பீடுகளை அறிந்த நபர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​இந்திய விமானப்படை லஷ்கர் அமைப்பின் முரிட்கே பகுதியில் உள்ள “மர்கஸ் தைபா” வளாகத்தை தாக்கியது. 1.09 ஏக்கர் […]
Terrorist headquarters

You May Like