நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து வருகிறது. இந்த விலையை சமாளிக்க முடியாமல் தான் அனைவரும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு ஏற்றார் போல் தான், ஒவ்வொரு கார் மற்றும் பைக் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது உற்பத்தியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில்தான், ஓலா நிறுவனம் பல்வேறு அம்சங்களுடன் கூடிய ஓலா எஸ் 1 ஏர் மாடலின் டெலிவரி பணிகளை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் விற்பனைக்கு வரவுள்ள இந்த இ-ஸ்கூட்டரை வாங்குவதற்கு இதுவரை 50,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்கள் :
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3 kwh பேட்டரி திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 151 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். மேலும், 6 BHP பவர் உள்ள ஹப் மவுண்ட் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இதில் Sports, ECO, Normal என 3 ரைடிங் மோட்டார் வசதிகள் உள்ளன.
இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரமாகும். இதில் ஒரு பெரிய 34 லிட்டர் பூட் அளவு இருக்கிறது. முன்பக்கம், பின்பக்கம் அதே வகை LED லைட்டிங், புதிதாக டிசைன் செய்யப்பட்ட கிராப் ரைலும் இடம் பெறுகிறது. மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போல் இல்லாமல், முதல் முறையாக ட்வின் போர்க் டெலோஸ்கோபிக் போர்க், ட்வின் ஷாக் வசதி, ட்ரம் பிரேநக் வசதிகள் , பிளாட் பூட் போர்டு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்கூட்டரின் விலை 1,19,999 ஆகும். நேவிகேஷன், டிஜிட்டல் கீ, மியூசிக் சிஸ்டம் போன்றவை உள்ளதால் பட்ஜெட் விலைக்கு ஏற்ற சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இது நிச்சயம் இருக்கும். இதோடு மட்டுமின்றி இது Ola Ather 450 S மற்றும் TVS iQube போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியாகவே இது அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.