fbpx

ஜியோ நிறுவனம் வெளியிட்ட அட்டகாசமான ஆஃபர் !!!

ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அட்டகாசமான ஆஃபர் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீபாவளி பரிசு சலுகையாக இருக்கும் என அறிவித்துள்ளது.

ஜியோ வெளியிட்டுள்ள இந்த திட்டத்தின் பெயர் டபுள் ஃபெஸ்டிவல் போனான்சா என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. ஜியோ சலுகையால் வாடிக்கையாளர்கள் செலுத்திய முழு பணமும் அவருக்கே திரும்ப கிடைக்கும் என்றால் பாருங்களேன்… அப்போ அட்டகாசமான ஆஃபர்தானே …

இந்தியாவில் 5 ஜி சேவைகள் அறிமுகமாகிவிட்டால் கூட அது சர்வசாதாரணமாக மாற இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் . அதுவரை இன்டெர்னெட் தேவைகளுக்கு நாம் 4 ஜி சேவைகளைத்தான் பயன்படுத்த வேண்டும். இதுதான் ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள இந்த திட்டத்திற்கு காரணம். எனவே முழு பணத்தையும் திரும்பக் கொடுக்கும் ஃபுல் மணி பேக் ஆபர் என்ற சலுகை யை அறிவித்துள்ளது.

இது பிராட்பேண்ட் சேவையின் கீழ் இந்த சலுகையை நாம் பெறலாம். நிறுவனம் கூறியுள்ளதாவது. புதிய ஜியே பைபர் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையில் 100 சதவீதம் வேல்யூ பேக் பெறும் வசதியை பெறலாம். இதற்கு நீங்கள் செலவழித்த பணம் உங்களையே அடையும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

புதிய பிராட்பேண்ட் சேவைக்காக மணி பேக் திட்டத்தில் உங்களுக்கு அது பணமாக கிடைக்காது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மாறாக இணையான வவுச்சர்களாகவே , சலுகையாகவே கிடைக்கும் இதுஅக்டோபர் 28 வரை மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி சலுகையின் கீழ் ஒருவர் ரூ.6,500 வரை மதிப்புள்ள பலன்களை பெறுவார். அதற்காக அவர், ரூ.599 மதிப்புள்ள ஜியோ ஃபைபர் திட்டத்தையோ அல்லது ரூ.899 மதிப்புள்ள ஜியோ ஃபைபர் திட்டத்தையோ தேர்வு செய்ய வேண்டும். மேற்கூறிய ஏதேனும் ஒரு திட்டத்தை, குறைந்தபட்சம் ஆறு மாத சந்தாவை நீங்கள் வாங்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு 100% வேல்யூ பேக் வவுச்சர்கள் கிடைக்கும்.


Next Post

விலையை குறைக்கவே மாட்டீங்களா?... ஏக்கத்தில் தவிக்கும் ஐபோன் வாடிக்கையாளர்கள்!!!

Wed Oct 19 , 2022
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விலை எப்போதுமே எண்ணிப்பார்க்காத வகையில் அதிகம் தான். தீபாவளி எல்லாம் வருது , புது செல்போனை எல்லாம் ரிலீஸ் பண்ணுறாங்க, விலைய குறைக்க மாட்டீங்களா என்ற ஏக்கத்தில்தான் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரு ஐபோன் வாங்க வேண்டும் என்றால் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் ஆண்களுக்கு அது நடக்காது ! அப்படியே ஒரு ஆண் நினைத்தாலும் சிறுக சிறுக சேர்த்து வைத்தாலும் வீட்டில் உள்ள பெண்களால் அது […]

You May Like