fbpx

ஐபோன் வைத்திருப்பவரா நீங்கள்..! இதை முதலில் செய்யுங்கள்..! ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை..!

ஐஃபோன், ஐபேட் (Ipad) ஆகியவை மென்பொருள் பாதிப்பை சந்திக்கக்கூடும் என அவற்றின் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக பாதுகாப்பு குறித்த இரண்டு அறிக்கைகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஐஃபோன் 6எஸ் மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்கள் மற்றும் ஐபேட் 5ஆம் தலைமுறை மற்றும் ஐபேட் ப்ரோ (Pro) மாடல்களில் மென்பொருள் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் வைத்திருப்பவரா நீங்கள்..! இதை முதலில் செய்யுங்கள்..! ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை..!

இவற்றை ’ஹேக்கர்கள்’ பயன்படுத்தக் கூடும் என்பதால், மென்பொருளை அப்டேட் செய்து கொள்ளுமாறு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆப்பிள் iOS , iPadOS மற்றும் macOS பாதுகாப்பு திருத்தங்களை வெளியிட்டு உள்ளது. தகவல் திருட்டு பாதிப்புகளைத் தவிர்க்க உங்கள் ஐபோன்களை 15.6.1 உடன் புதுப்பிக்கவும்.” என்று பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

நேற்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை...? மத்திய அரசு அறிக்கை...

Sun Aug 21 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 11,539 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 43 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,040 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like