மீட்டாவின் ஃபேஸ்புக் நிறுவனம் , வாடிக்கையாளர்களின் முக்கியமான தகவல்களை திருடிய 400 ஆன்டிராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் இது தொடர்பாக தனது பிளாகில் , ’’ ஃபேஸ்புக் நிறுவனம் சில முக்கிய தகவல்கள் அதாவது பாஸ்வேர்ட் மற்றும் உள்நுழைய பயன்படுத்தப்படும் யுசர்ஐடி போன்ற பல தகவல்களை ஆன்டிராய்டு, ஐ.ஓ.எஸ். உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட செயலிகள் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டில் ஈடுபட்டதை ஃபேஸ்புக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது . ஃபோட்டோவை எடிட் செய்யும் செயலி, விளையாட்டு செயலி, விபிஎன் சேவை, வணிக பயன்பாட்டு செயலிகள் , போன்றவை மக்களை தரவிறக்கம் செய்ய வைத்து அதன் மூலமாக திருட்டுத்தனத்தை அரங்கேற்றி உள்ளது.
இது தொடர்பாக ஆப்பிள் , கூகுள் நிறுவனங்கள் இந்த பிரச்சனை தொடர்பாக தங்கள் வாடிக்கையாளர்கள் இது போன்ற செயலிகளை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மீட்டா நிறுவனமும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு பாதுகாப்பாக இருக்கவும் அவர்களின் கணக்குகளைப் பாதுகாப்பது எப்படி என்பதை பற்றியும் மேலும் உதவி செய்வாக தெரிவித்துள்ளது.