fbpx

பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி..!! இதுதான் கரெக்ட் டைம்..!! ரூ.15 ஆயிரமா..? உடனே முந்துங்கள்..!!

இந்திய சந்தையில் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்யும் ஒரே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றால் அது பஜாஜ் சேடக் தான். இதற்கு போட்டியாக டிவிஎஸ் ஐகியூப், ஏத்தர் 450X, மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தையில் உள்ளன. இந்நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு, பஜாஜ் நிறுவனம் தனது சேடக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை எப்போது தொடங்கப்படும் என்பது பற்றி சரியான தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.

சேடக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் :

இந்த ஸ்கூட்டர் லித்தியம்-அயன் பேட்டரி கொண்டுள்ளது. இதில் ஈக்கோ மோடில் 90 கிமீ வரை செல்லலாம். ஸ்போர்ட்ஸ் மோடில் 80 கிமீ வரை பயணிக்கலாம். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜில் ‘ஈகோ’ முறையில் 108 கிமீட்டரும், இத்துடன் 230V போர்ட்டபிள் சார்ஜரும் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான 5A பவர் சாக்கெட்டைப் பயன்படுத்தினால், பேட்டரியை 5 மணி நேரத்திற்குள் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இந்த ஸ்கூட்டர் 1,950 rpm-இல் 20Nm முறுக்குவிசையில் இயங்குகிறது. இதில் மேஷ் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் Body ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ரிவர்ஸ் மோட் அம்சமும் உண்டு. இந்த ஸ்கூட்டருக்கு ஸ்மார்ட் கீயும் வழங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து LED லைட்டிங், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் ஆப் அடிப்படையிலான அறிவிப்புகளுடன் கூடிய ஸ்மார்ட்போன் இணைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதில் 4ஜி இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன், பின்புற மோனோஷாக், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டிரம் பிரேக் ஆகியவை உள்ளன. இதன் சீட்கள் டூயல் டோன்களிலும், வீல் ரிம்ஸ், பில்லியன் ஃபூட்ரெஸ்ட் மற்றும் ஹேண்டில் ஆகியவை சார்கோல் பிளாக் ட்ரிமுடன் வருகிறது. எனவே, சிறந்த தள்ளுபடியில் இந்த பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விரும்பினால் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்.

விலை விவரம் :

பேட்டரியில் இயங்கக்கூடிய இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இப்போது ரூ. 1,30,000 (எக்ஸ்-ஷோரூம் விலை) விலையில் குறுகிய கால தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இதன் அசல் விலையில் இருந்து ரூ.15,000 குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

என்னது முள்ளங்கி சாப்பிட்டால், பசி எடுக்குமா….? அடடே புது விஷயமா இருக்கே….!

Mon Aug 28 , 2023
நாம் அன்றாடம் நம்முடைய உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளில் ஒன்று தான் முள்ளங்கி. ஆனால், இந்த முள்ளங்கியில் இருக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை பெரிதாக யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த முள்ளங்கியில் விட்டமின் பி, சி, கே பொட்டாசியம், நார்சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதயத்தை பலப்படுத்துவதற்கு தேவைப்படும் அந்தோனிசியனின் முள்ளங்கியில் நிறைவாக இருக்கிறது. முள்ளங்கி சாப்பிட்டு வருவதால், இரத்த […]

You May Like